November 21, 2007
யூலை 60 தேர்தல் தமிழருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தின் உச்சத்தைக் குறிக்கிறது. இத் தேர்தலில் முக்கிய தலைவியாகச் சிறிமாவோ உருவெடுத்தார். தனது கணவர் பண்டா காட்டிய வழியில் அவரது கொள்கைகளையே பின்பற்றப் போவதாக பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தார்.
இத்தோடு C. P.L . S. S. P ஆகிய இரு கட்சிகளோடும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிங்களப் பௌத்த மக்களுக்காக உழைக்கப் போவதாக இவர் கூறியதை நம்பிய சிங்கள மக்கள் 33.6 விழுக்காடு வாக்குகளை அளித்து 75 இடங்களில் வெல்ல வைத்தனர். Read the rest of this entry »
1 Comment |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist
November 21, 2007
1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது. அன்றையதினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 60 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயன்றனர்.
தகுந்த தலைமை இல்லாததால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது. இந்நிலையில் டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது. S .L. F. P யோ , தமிழரசுக்கட்சியோடு இரகசியப் பேச்சுக்களை நடாத்தியது. தமக்கு ஆதரவளித்தால் திரும்பவும் பண்டா-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.
Read the rest of this entry »
Leave a Comment » |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist
November 21, 2007
1959ஆண்டளவில் பண்டாரநாயக்காவின் MEP எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னனியில் பிளவுகள் தோன்றின. இடது சாரிப் போக்குள்ள பிலிப் குணவர்த்தனா போன்றோரை விலக்குமாறு வலது சாரிப் போக்குள்ளோர்களும் பௌத்த பிக்குகளும் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
எனினும் பண்டாவின் போக்கில் திருப்தியடையாத வலது சாரி அமைச்சர்களும் பிக்குகளும் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். பிக்குகள் முன்னனியின் செயலாளரும் களனி விகாரையின் அதிபதியுமான (ரஐமகாவிகாரை ) புத்திர கித்திரதேரோ தலைமையில் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
Read the rest of this entry »
Leave a Comment » |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist
November 21, 2007
பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது.
அதே வேளை கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே இதற்குத தலைமை தாங்கினர்.
தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ந்தன. Read the rest of this entry »
Leave a Comment » |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist
November 21, 2007
1956ம் யூலை 5ம் நாள் நடைமுறைக்கு வந்த சிங்கள மொழிச் சட்டத்தைதத் தொடர்ந்து தந்தை செல்வா தலைமையில் நடத்தப்பட் காந்தியப் போராட்டம் நசுக்கப்பட்டதை அடுத்தும் கொழும்பில் இனக்கலவரம் பரவியது. வீதியிலும் பேருந்துகளிலும் கண்ட வீதிகளிலும் கடைகளிலும் கொள்ளைகள் நடைபெற்றன. இக்கலவரங்கள் கிழக்கு மாகாணத்தில் கல்லோயா அம்பாறைப் பகுதிகளிலும் பரவியது.
தமிழர் பகுதிகளிலே குடியேற்றப்பட்ட சிங்களவர் இப்பகுதித் தமிழ்மக்களைத் தாக்கினர். பெண்கள், குழந்தைகள் உட்பட 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். Read the rest of this entry »
Leave a Comment » |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist
November 21, 2007
ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினைப் பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்ப்படும் இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவதும் அவசியமாகின்றது.எனவே எமது இந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்,அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கின்றோம்.
Read the rest of this entry »
Leave a Comment » |
வரலாறு |
Permalink
Posted by tamiljournalist