2007 ஆம் ஆண்டில் 86 செய்தியாளர்கள் கொலை

January 3, 2008

26.jpg1994 ஆம் ஆண்டு ருவண்டாவில் இனப்படுகொலை காலத்தில் அங்கு அதிகமான செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு ஆண்டில் மிகவும் அதிகமாக, கடந்த 2007 ஆம் ஆண்டில்தான் 86 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மேலும் ஒரு டஜன் பேர் கடத்தப்பட்டு அல்லது விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டதாக, பாரிசை தளமாகக் கொண்டு செயற்படும், எல்லைகளில்லா பத்திரிகையாளர் அமைப்பு கூறியுள்ளது.

Read the rest of this entry »


விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன்

December 19, 2007

s-p-tamilchelvan-2.jpg1984 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின்  தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும். Read the rest of this entry »


சிங்கள இடது சாரிக்கட்சியின் துரோகம்

December 10, 2007

1960 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற சிங்கள இடதுசாரிக் கட்சிகள் கோரி வந்தன. ஆனால் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் இவர்களால் இனவாதம் பேசும் சிங்களக கட்சிகளைக் தோற்கடிக்க முடியாத நிலையில் இவர்களும் இனவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

1960 ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிசக் கட்சி தமிழ் மொழிக்குச் சம உரிமை என்கின்ற கொள்கையை கைவிடுகிறது. அது போலவே L. S. S.P யும் கைவிட்டு 64 ஆம் ஆண்டளவிற் சிறிமாவின் சிங்கள இனவாத அரசியலிற் சேர்கின்றது. Read the rest of this entry »


தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகமும் சிங்கள இராணுவ அடக்கு முறையுன் தொடக்கமும்

November 21, 2007

சிறிமாவோ அம்மையார் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிச்சிங்கள மொழியைத் தமிழர்மீது திணிக்கத் தொடங்கினார். இதனால் தமிழரசுக் கட்சி 61ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர்.

தமிழ்ப்பகுதிகளில்  அரச நிர்வாகம்  தனிச் சிங்களத்தில் மேற்கொள்ளப் படுவதைத்தடுக்கு முகமாகயாழ்ப்பாணம்,வவுனியா,

மன்னார்,திரிகோண மலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசாங்க செயலகங்களை இயங்காமல் தடுப்பதற்காக இவைகளின் முன்னே சத்தியாக்கிரகம் செய்வதற்கு முடிவானது.

Read the rest of this entry »


அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்

November 21, 2007

1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 1960ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது.

அன்றைய தினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 1960 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப்  பயன்படுத்த முயன்றனர்.

தகுந்த தலைமை இல்லாததால் சி.சு.க தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது.

Read the rest of this entry »


1960 யூலைத் தேர்தல்

November 21, 2007

யூலை 60 தேர்தல் தமிழருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தின்  உச்சத்தைக் குறிக்கிறது. இத் தேர்தலில் முக்கிய தலைவியாகச் சிறிமாவோ உருவெடுத்தார். தனது கணவர் பண்டா காட்டிய வழியில் அவரது கொள்கைகளையே பின்பற்றப் போவதாக பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தார்.

இத்தோடு  C. P.L . S. S. P  ஆகிய இரு கட்சிகளோடும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிங்களப் பௌத்த மக்களுக்காக உழைக்கப் போவதாக இவர் கூறியதை நம்பிய சிங்கள மக்கள் 33.6 விழுக்காடு வாக்குகளை அளித்து 75 இடங்களில் வெல்ல வைத்தனர். Read the rest of this entry »


1960-1970 அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்.

November 21, 2007

1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது. அன்றையதினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 60 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப்  பயன்படுத்த முயன்றனர்.

தகுந்த தலைமை இல்லாததால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது. இந்நிலையில்  டட்லி  சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது.  S .L. F. P யோ , தமிழரசுக்கட்சியோடு இரகசியப் பேச்சுக்களை நடாத்தியது.  தமக்கு ஆதரவளித்தால் திரும்பவும் பண்டா-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.
Read the rest of this entry »


பண்டாரநாயக்கா கொலை.

November 21, 2007

1959ஆண்டளவில் பண்டாரநாயக்காவின் MEP  எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னனியில்  பிளவுகள் தோன்றின. இடது சாரிப் போக்குள்ள பிலிப் குணவர்த்தனா போன்றோரை விலக்குமாறு வலது சாரிப் போக்குள்ளோர்களும்  பௌத்த பிக்குகளும் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் பண்டாவின் போக்கில் திருப்தியடையாத வலது சாரி அமைச்சர்களும் பிக்குகளும் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். பிக்குகள் முன்னனியின் செயலாளரும் களனி விகாரையின் அதிபதியுமான  (ரஐமகாவிகாரை )  புத்திர கித்திரதேரோ தலைமையில் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டது. 

Read the rest of this entry »