சக்தி செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது-34) என்பவர் கூரிய ஆயதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஐந்து வருடங்களுக்குமதிகமாக சக்தியின் யாழப்பாணச் செய்தியாளராக கடமையாற்றிய இவர் கோயில் திருவிழாக்கள் உட்பட குடாநாட்டின் விளையாட்டு நிகழவுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்பட்டுவந்த போதிலும் அரசியல் ரீதியான அறிக்கையிடல்களை குடாநாட்டு சூழ்நிலை காரணமாக தவிர்த்து வந்தார் என்றும் தெரிவிக்கப்டுகின்றது.
இறுதியாக குடாநாட்டில் நிகழ்த்தப்பட்ட வெசாக் மற்றும் காணிவேல் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை அறிக்கையிட்டிருந்தார்.
சம்பவ தினமன்று தமது பணிகளை முடித்துவிட்டு அயல் வீட்டு நண்பருடன மோட்டார் சயிக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது யாழ் நகரின் மேற்குபகுதியான கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வழிமறித்த கொலையாளிகள் வெட்டிக் கொலை செய்தபின் அவரிடமிருந்த ஆவனங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடமே திருமணமாகிய இவரின் மனைவி தற்போது கருவுற்றிருக்கின்றார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
This entry was posted on Wednesday, June 25th, 2008 at 6:43 am and is filed under 1. You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.