| வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. |
| இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தாங்கள் அரசாங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக 4 புகைப்பட ஊடகவியலாளர்கள் எம்மிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். மருத்துவமனைகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுத்து களமுனை பாதிப்புக்களை வெளியிடுவதில் எதுவித பிரச்சினையும் இல்லை. |
Posted by tamiljournalist