சிங்கள இடது சாரிக்கட்சியின் துரோகம்

1960 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற சிங்கள இடதுசாரிக் கட்சிகள் கோரி வந்தன. ஆனால் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் இவர்களால் இனவாதம் பேசும் சிங்களக கட்சிகளைக் தோற்கடிக்க முடியாத நிலையில் இவர்களும் இனவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

1960 ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிசக் கட்சி தமிழ் மொழிக்குச் சம உரிமை என்கின்ற கொள்கையை கைவிடுகிறது. அது போலவே L. S. S.P யும் கைவிட்டு 64 ஆம் ஆண்டளவிற் சிறிமாவின் சிங்கள இனவாத அரசியலிற் சேர்கின்றது.

இக் கால கட்டத்திலே இக்கட்சியிலிருந்த தமிழ் இடதுசாரிகள் பெருமளவில் வெளியேறினர். ஆனால் பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி, போன்ற சிங்களப் பகுதித் தலைவர்கள் L. S. S, P யின் இனவாதப் போக்கைக் கண்டித்துக் கட்சியிலிருந்து வெளியேறி L. S. S. P ( R )  என்ற தனியான கட்சியை அமைக்கின்றனர். 

L.S. S. P சேர்ந்த  N. M.பெரேரா நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார். ஆனால் இந்த இடதுசாரிகளைச் சேர்த்ததால் சிறிமாவின் கட்சியிலிருந்த சிங்களப் பௌத்த வெறியர்கள் இறுதியில் சிறிமாவின் அரசையே கவிழ்த்தனர்.

இவ்வாறாக 1964ஆம் ஆண்டு சிறிமாவோ லேக்கவுஸ் (ஏரிக்கரை) பத்திரிகைகளை அரசாங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்த பொழுது களனி அமைச்சராகவிருந்த சி. பி. டி. சில்வா 13 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு U. N. P க்குத் தாவினார். இதன் காரணமாக 1964 ஆம் ஆண்டு   ளு. டு. கு. P  அரசாங்கம் தோல்வியடைய, புதிய நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் 1965ல் நடைபெற்றது.

Leave a Reply