1958ம் ஆண்டு இனக் கலவரம்

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது.

அதே வேளை  கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே  இதற்குத தலைமை தாங்கினர்.

தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ந்தன.

இதே நிலைமைகளின் பின்னர் தனது எதிர்காலத்திட்டங்களைப்பற்றி முடிவெடுப்பதற்காகத் தமிழரசுக்கட்சி 58ம்ஆண்டு மே மாதமுடிவில் வவுனியாவில் வருடாந்த மகாநாட்டை நடத்தியது.

இம் மாகாநாட்டில்தான் பண்டா-செல்வா உடன்பாடு கைவிடப்பட்டமையால் அகிம்சை வழியில் சத்தியாக்கிரகம் என்னும் நேரடி  நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இத்தீர்மானம் வவுனியாவில் எடுக்கப்பட்ட பொழுதே அங்கு கலவரம் தொடங்கும் சூழ் நிலைகள் தோன்றின. மாநாட்டில் கலந்துவிட்டு மட்டக்களப்பிற்குப் புகையிரதத்தில் திரும்பிக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களைப் பொலனறுவையில் வைத்துக் சிங்களக் காடையர் தாக்கினர்.

பலர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். மே 25ம்திகதியன்று கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற புகையிரதம் தடம் புரளச்செய்யப்பட்டு தமிழர்கள் தாக்கப்பட்டு உடமைகள் கொள்ளையிடப்பட்டன. அதே தினத்தன்று தனிப்பட்ட பகமை காரணமாகக் களுவாஞ்சிக் குடியிற் சிங்களவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் நுவரெலியாவின் முன்னாள் மேஐராவர். அவர் கொலை செய்யப்பட:ட செய்தி பல தடவைகள் வேண்டுமென்றே சிங்கள வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவ்வாறாகத் தமிழர்கள் மீது தாக்குதல்கள் தொடங்கப்பட்டன.

நான்கு நாட்களாக எந்த நவடிக்கையுமே எடுக்கவில்லை. அவசரகால நிலைமையைப் பிறப்பித்துக் கலவரத்தைத் தடுக்கமாறு விடப்பட்ட வேண்டுகோளை அவர் கவனத்தில் எடுக்கவேயில்லை. இறுதியில் அவரைப் பாராது அப்போது மகாதேசாதிபதியாக இருந்த ஒருவர் குணத்திலக தானே அவசரகால நிலைமையைப் பிறப்பித்து இராணுவத்தை அழைத்துக் கலவரங்களைக் குறைத்தார்.

ஆனால் பல நூற்றுக்கணக்கான தமழர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். 10000ற்கு மேற்பட்ட கொழும்பு வாழ் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர். 10 தமிழரசுக்கட்சி எம்பீக்கள் உட்பட 150 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழரசுக்கட்சி எம்பீக்கள்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

Leave a Reply