1960 யூலைத் தேர்தல்

யூலை 60 தேர்தல் தமிழருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தின்  உச்சத்தைக் குறிக்கிறது. இத் தேர்தலில் முக்கிய தலைவியாகச் சிறிமாவோ உருவெடுத்தார். தனது கணவர் பண்டா காட்டிய வழியில் அவரது கொள்கைகளையே பின்பற்றப் போவதாக பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தார்.

இத்தோடு  C. P.L . S. S. P  ஆகிய இரு கட்சிகளோடும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிங்களப் பௌத்த மக்களுக்காக உழைக்கப் போவதாக இவர் கூறியதை நம்பிய சிங்கள மக்கள் 33.6 விழுக்காடு வாக்குகளை அளித்து 75 இடங்களில் வெல்ல வைத்தனர்.

ஐ. தே. க . வோ 37.6 விழுக்காடு வாக்குகளை பெற்றும் 30 ஆசனங்கள் கிடைத்தது. L. S. S .P ற்கு 12 ஆசனங்கள் கிடைத்தது. தமிழரசுக்கட்சி, 16 இடங்களைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறாகச் சிறிமாவோ உலகின் 1 வது  பெண் பிரதமராகப் பதவி ஏற்றார்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் தான் தமிழர் பகுதிகளில் இராணுவ அடக்குமுறை முதன் முறையாக கட்டவிழ்த்து விடப்பட்டது.

One Response to “1960 யூலைத் தேர்தல்”

  1. lenin Says:

    I am expecting more articles… like this

Leave a Reply