1959ஆண்டளவில் பண்டாரநாயக்காவின் MEP எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னனியில் பிளவுகள் தோன்றின. இடது சாரிப் போக்குள்ள பிலிப் குணவர்த்தனா போன்றோரை விலக்குமாறு வலது சாரிப் போக்குள்ளோர்களும் பௌத்த பிக்குகளும் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
எனினும் பண்டாவின் போக்கில் திருப்தியடையாத வலது சாரி அமைச்சர்களும் பிக்குகளும் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். பிக்குகள் முன்னனியின் செயலாளரும் களனி விகாரையின் அதிபதியுமான (ரஐமகாவிகாரை ) புத்திர கித்திரதேரோ தலைமையில் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டது.
செப்ரெம்பர் 25 1959 ல் பிரதமரின் உத்தியோக பூர்வ வீட்டில் சோமராமதேரோவால் பண்டாரநாயக்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின் நாடாளுமன்றம் டிசெம்பர் 1959 ல் கலைக்கப்பட்டது.
மார்ச் 1960 ல் புதிய தேர்தல் நடைபெற்றது. இவ்வாறாகத் தான் வளர்த்துவிட்ட பேரினவாதச் சக்தியினால் அவர்களை முற்றிலும் திருப்திப்படுத்தாத நிலையில் அவர்களாலேயே பண்டா பலியெடுக்கப்பட்டார்.