தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகமும் சிங்கள இராணுவ அடக்கு முறையுன் தொடக்கமும்

November 21, 2007

சிறிமாவோ அம்மையார் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிச்சிங்கள மொழியைத் தமிழர்மீது திணிக்கத் தொடங்கினார். இதனால் தமிழரசுக் கட்சி 61ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர்.

தமிழ்ப்பகுதிகளில்  அரச நிர்வாகம்  தனிச் சிங்களத்தில் மேற்கொள்ளப் படுவதைத்தடுக்கு முகமாகயாழ்ப்பாணம்,வவுனியா,

மன்னார்,திரிகோண மலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசாங்க செயலகங்களை இயங்காமல் தடுப்பதற்காக இவைகளின் முன்னே சத்தியாக்கிரகம் செய்வதற்கு முடிவானது.

Read the rest of this entry »


அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்

November 21, 2007

1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 1960ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது.

அன்றைய தினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 1960 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப்  பயன்படுத்த முயன்றனர்.

தகுந்த தலைமை இல்லாததால் சி.சு.க தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது.

Read the rest of this entry »


1960 யூலைத் தேர்தல்

November 21, 2007

யூலை 60 தேர்தல் தமிழருக்கு எதிரான இனவாதப் பிரச்சாரத்தின்  உச்சத்தைக் குறிக்கிறது. இத் தேர்தலில் முக்கிய தலைவியாகச் சிறிமாவோ உருவெடுத்தார். தனது கணவர் பண்டா காட்டிய வழியில் அவரது கொள்கைகளையே பின்பற்றப் போவதாக பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தார்.

இத்தோடு  C. P.L . S. S. P  ஆகிய இரு கட்சிகளோடும் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். சிங்களப் பௌத்த மக்களுக்காக உழைக்கப் போவதாக இவர் கூறியதை நம்பிய சிங்கள மக்கள் 33.6 விழுக்காடு வாக்குகளை அளித்து 75 இடங்களில் வெல்ல வைத்தனர். Read the rest of this entry »


1960-1970 அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்.

November 21, 2007

1960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 60ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது. அன்றையதினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 60 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப்  பயன்படுத்த முயன்றனர்.

தகுந்த தலைமை இல்லாததால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது. இந்நிலையில்  டட்லி  சேனநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைத்தது.  S .L. F. P யோ , தமிழரசுக்கட்சியோடு இரகசியப் பேச்சுக்களை நடாத்தியது.  தமக்கு ஆதரவளித்தால் திரும்பவும் பண்டா-செல்வா உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியது.
Read the rest of this entry »


பண்டாரநாயக்கா கொலை.

November 21, 2007

1959ஆண்டளவில் பண்டாரநாயக்காவின் MEP  எனப்படும் மக்கள் ஐக்கிய முன்னனியில்  பிளவுகள் தோன்றின. இடது சாரிப் போக்குள்ள பிலிப் குணவர்த்தனா போன்றோரை விலக்குமாறு வலது சாரிப் போக்குள்ளோர்களும்  பௌத்த பிக்குகளும் வற்புறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

எனினும் பண்டாவின் போக்கில் திருப்தியடையாத வலது சாரி அமைச்சர்களும் பிக்குகளும் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். பிக்குகள் முன்னனியின் செயலாளரும் களனி விகாரையின் அதிபதியுமான  (ரஐமகாவிகாரை )  புத்திர கித்திரதேரோ தலைமையில் கொலைச் சதித்திட்டம் தீட்டப்பட்டது. 

Read the rest of this entry »


1958ம் ஆண்டு இனக் கலவரம்

November 21, 2007

பண்டா-செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல இருபகுதியிலும் எதிர்ப்புணர்வுகள் அதிகரித்தன. சிங்கள சிறீஎதிர்ப்பைத் தமிழ்ப்பகுதிகளிற் தமிழரசுக்கட்சி தொடர்ந்தது.

அதே வேளை  கொழும்பிலும் ஏனைய சிங்களப் பிரதேசங்களிலும் தமிழ் எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் வேலை தொடர்ந்தது. பௌத்த பிக்குகளே  இதற்குத தலைமை தாங்கினர்.

தமிழருக்கு எதிராகச் சிங்களவரைக் கிளர்ந்தெழுமாறு இவர்கள் தூண்டினர். இதனால் கொழும்பிலும் ஏனைய நகர்ப்புறங்களிலும் ஆங்காங்கே தமிழர் தாக்கப்படுவதும் தமிழர் கடைகள் கொள்ளையிடப்படுவதும் வீடுகள் கல்லெறிக்குள்ளாக்கப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ந்தன. Read the rest of this entry »


பண்டா – செல்வா உடன்பாடு

November 21, 2007

தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்ட பின்னர் 57ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இவற்றை நிறைவேற்றக்கோரி சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து பண்டாரவிற்கும் செல்வாவுக்கும் இடையில் பல முறை பேச்சுக்கள் நடந்தன. இதன் விளைவாகவே 1957ம் ஆணடு பண்டா – செல்வா உடன்பாடு ஏற்பட்டது. இது ஒரு முக்கியமான உடன்பாடு. ஏனென்றால் இன்றுவரை செய்யப்பட்ட உடன்பாடுகளை விட கூடியளவு அதிகாரங்களை இவ்வுடன்பாடு வழங்கியது. Read the rest of this entry »


1956ம் ஆண்டு தமிழரசுக் கட்சியின் திருமலை மாநாடு

November 21, 2007

சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தால் தமிழ்த் தேசியம் என்கின்ற தன்மான உணர்வு தமிழ் மக்களிடையே முளைவிட்டது. 56ம் ஆண்டு கலவரத்தால் கோபமும் அவமானமும் அடைந்த தமிழ்மக்களின் எண்ணங்களை உணர்ந்து கொண்ட தமிழரசுக்கட்சி திருமலையில் ஓகஸ்ட் மாதம் 19ம் திகதி 56ம் ஆண்டு தனது கட்சியின் தேசிய மாநாட்டை நடத்தியது. இங்கு தான் முதன் முறையாக நான்கு அம்சத்திட்டம் என்கின்ற பெயரில் தமிழ்மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை அடைவதற்காக அகிம்சை வழியில் தொடர்ந்து போராடப் போவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.