இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு தேவையான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகள் சபை பிரயோகிக்க வேண்டும் என்று உலக ஊடகவியலாளர்கள் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. |
29 உலக ஊடக அமைப்புக்கள் இணைந்து விடுத்துள்ள இக்கோரிகை தொடர்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: |
“ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான அழுத்தத்தினை ஐ.நா. பிரயோகிக்க வேண்டும்”
June 25, 2008ஊடகவியலாளன் தேவகுமார் படுகொலை
June 25, 2008சக்தி செய்தியாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் (வயது-34) என்பவர் கூரிய ஆயதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஐந்து வருடங்களுக்குமதிகமாக சக்தியின் யாழப்பாணச் செய்தியாளராக கடமையாற்றிய இவர் கோயில் திருவிழாக்கள் உட்பட குடாநாட்டின் விளையாட்டு நிகழவுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் அக்கறையுடன் செயற்பட்டுவந்த போதிலும் அரசியல் ரீதியான அறிக்கையிடல்களை குடாநாட்டு சூழ்நிலை காரணமாக தவிர்த்து வந்தார் என்றும் தெரிவிக்கப்டுகின்றது. Read the rest of this entry »
தகவல் அறியும் உரிமைக்கு அரசாங்கமும் புலிகளும் மதிப்பளிக்க வேண்டும்.
April 26, 2008| வட போர்முனையான முகமாலைக் களமுனையில் பல நூற்றுக்கணக்கில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறிலங்காப் படையினரைச் சந்திக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. |
| இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் படையினரை புகைப்படம் எடுக்கச் சென்ற போது தாங்கள் அரசாங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக 4 புகைப்பட ஊடகவியலாளர்கள் எம்மிடம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தனர். மருத்துவமனைகளுக்குள் ஊடகவியலாளர்கள் சென்று புகைப்படம் எடுத்து களமுனை பாதிப்புக்களை வெளியிடுவதில் எதுவித பிரச்சினையும் இல்லை. |
2007 ஆம் ஆண்டில் 86 செய்தியாளர்கள் கொலை
January 3, 2008
1994 ஆம் ஆண்டு ருவண்டாவில் இனப்படுகொலை காலத்தில் அங்கு அதிகமான செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, ஒரு ஆண்டில் மிகவும் அதிகமாக, கடந்த 2007 ஆம் ஆண்டில்தான் 86 செய்தியாளர்கள் கொல்லப்பட்ட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மேலும் ஒரு டஜன் பேர் கடத்தப்பட்டு அல்லது விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டதாக, பாரிசை தளமாகக் கொண்டு செயற்படும், எல்லைகளில்லா பத்திரிகையாளர் அமைப்பு கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன்
December 19, 2007
1984 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.
1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும். Read the rest of this entry »
சிங்கள இடது சாரிக்கட்சியின் துரோகம்
December 10, 20071960 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழிக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்ற சிங்கள இடதுசாரிக் கட்சிகள் கோரி வந்தன. ஆனால் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதத் தேர்தலில் இவர்களால் இனவாதம் பேசும் சிங்களக கட்சிகளைக் தோற்கடிக்க முடியாத நிலையில் இவர்களும் இனவாதக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.
1960 ஆம் ஆண்டு இலங்கை கொம்யூனிசக் கட்சி தமிழ் மொழிக்குச் சம உரிமை என்கின்ற கொள்கையை கைவிடுகிறது. அது போலவே L. S. S.P யும் கைவிட்டு 64 ஆம் ஆண்டளவிற் சிறிமாவின் சிங்கள இனவாத அரசியலிற் சேர்கின்றது. Read the rest of this entry »
தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகமும் சிங்கள இராணுவ அடக்கு முறையுன் தொடக்கமும்
November 21, 2007சிறிமாவோ அம்மையார் தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிச்சிங்கள மொழியைத் தமிழர்மீது திணிக்கத் தொடங்கினார். இதனால் தமிழரசுக் கட்சி 61ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தனர்.
தமிழ்ப்பகுதிகளில் அரச நிர்வாகம் தனிச் சிங்களத்தில் மேற்கொள்ளப் படுவதைத்தடுக்கு முகமாகயாழ்ப்பாணம்,வவுனியா,
மன்னார்,திரிகோண மலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசாங்க செயலகங்களை இயங்காமல் தடுப்பதற்காக இவைகளின் முன்னே சத்தியாக்கிரகம் செய்வதற்கு முடிவானது.
அகிம்சை வழியிலான போராட்ட முனைப்புகளின் முடிவும் புதிய போராட்ட வடிவத்தின் ஆரம்பமும்
November 21, 20071960 மார்ச் நடைபெற்ற தேர்தல் இனவாதத்தின் அடிப்படையிலே நடாத்தப்பட்டது. ஐனவரி 2ம் திகதி 1960ம் ஆண்டிலிருந்து இலங்கையில் நிர்வாகமுறை சிங்கள மொழிக்கு மாற்றஞ்செய்யப்பட்டது.
அன்றைய தினம் தமிழ்ப் பகுதிகளில் தமிழரசுக்கட்சி பூரணகர்த்தாலை மேற்கொண்டது. எனவே மார்ச் 1960 தேர்தலில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் தமிழர்க்கு எதிரான இனவாதத்தைத் தமது வெற்றிக்கு வாய்ப்பாகப் பயன்படுத்த முயன்றனர்.
தகுந்த தலைமை இல்லாததால் சி.சு.க தேர்தலில் 46 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. தமிழரசுக்கட்சி 15 இடங்களைப் பெற்றது. ஐ. தே. க. 50 இடங்களைப் பெற்றது.
Posted by tamiljournalist
Posted by tamiljournalist
Posted by tamiljournalist